60 குழந்தைகளுக்கு தகப்பனாய் உள்ள நபர்

Report
160Shares

இங்கிலாந்தில் உயிரணு தானம் பெற்று குழந்தைகள் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன் பலனாக முறைப்படுத்தப்பட்ட உயிரணு வங்கிகள் பல தொடங்கி பெண்கள் பலர் குழந்தைகளுக்கு தாயகின்றனர்.

ஆனால் முறைபடுத்தப்படாத முறையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் அவரது மனைவிக்கு தெரியாமல் 60 குழந்தைகளுக்கு தந்தையாகி இருப்பதாகவும் மேலும் 7 குழந்தைகளுக்கு உயிரணு தானம் செய்துள்ளதாகவும் ஆவணப்படம் மூலம் வெளியாகியுள்ளது.

இவ்வாறு உயிரணு தானம் மற்றும் சிகச்சை மூலம் முறைபடி செய்தால் லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால், முறைப்படுத்தப்படாத உயிரணு தானம் செய்தால் 3 ஆயிரம் ரூபாயில் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற முடியும்.

இதனால் முறை படுத்தப்படாத தானம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அவர்கள் உயிரணு தானம் செய்ய பேஸ்புக் குரூப்பில் விளம்பரம் செய்து, வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து உயிரணுவை தானம் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

4663 total views