வடகொரிய நெருக்கடி: இராஜதந்திர அழுத்தத்தை வலியுறுத்தும் அவுஸ்ரேலியா

Report
10Shares

வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு அதிகபட்ச இராஜதந்திர அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என அவுஸ்ரேலிய அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அவுஸ்ரேலிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் இன்று (வியாழக்கிழமை), பலத்த பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்ட கொரிய எல்லைக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது மேலும் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப், ”அமெரிக்கா, தென் கொரியா, அவுஸ்ரேலியா மற்றும் ஏனைய நாடுகளின் முயற்சிகள், வட கொரியாவில் அதிகபட்ச அரசியல், இராஜதந்திர, பொருளாதார அழுத்தத்தை உறுதிபடுத்தியுள்ளன. அது வடகொரியாவின் போக்கை மாற்றும்.

ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தீர்மானங்களை மீறி செயற்படும் வடகொரியாவின் செயற்பாடுகள் சட்டவிரோதமானவை. எனவே, வடகொரியாவின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் தென்கொரியாவிற்கும், அதன் நட்பு நாடுகளுக்கும் அவுஸ்ரேலியா ஆதரவாக செயற்படும்” எனத் தெரிவித்தார்.

1247 total views