உலகமே எதிர்நோக்கிய ட்ரம்ப் கிம் சந்திப்பில் முக்கிய ஒப்பந்தம்!

Report
46Shares

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நடுவே முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

சிங்கப்பூரில் முதல் முறையாக இவ்விரு தலைவர்கள் நடுவே இன்று நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதுபற்றி ட்ரம்ப் நிருபர்களிடம் கூறுகையில், முக்கிய ஆவணத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். அது விரிவான ஆவணமும் கூட. நாங்கள் இன்னும் பல முறை கூட சந்திக்க உள்ளோம். கிம் ரொம்பவே திறமையானவர் என்பதையும், தனது நாட்டின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்பதையும் அவருடனான சந்திப்பின்போது, அறிந்து கொண்டேன்.

கிம் ஜாங்-உன்னுடன் சிறப்பான உறவு ஏற்பட்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பான சந்திப்பு. சந்திப்பை நினைத்தால் பெருமையாக உள்ளது என்றார். வெள்ளை மாளிகைக்கு கிம்மை வரவேற்பீர்களா என்ற நிருபரின் கேள்விக்கு, கண்டிப்பாக அழைப்பேன் என்றார்.

கிம் ஜாங்க் உன் கூறுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு. கடந்த காலத்தை மறக்க முடிவு செய்துள்ளோம் என்றார். உலகம் புதிய மாற்றங்களை பார்க்க உள்ளது என்றார். முன்னதாக சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்புகள் மிக்க மதிய உணவை இருவரும் இணைந்து சாப்பிட்டனர்.

இரு தலைவர்களும் கையெழுத்திட்ட அந்த ஆவணம் என்ன என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை.

2749 total views