துருக்கியில் நடந்த கொடூர சம்பவம்:376 பயணிகளுடன் தொடருந்து விபத்து 24பேர் உயிரிழப்பு

Report
193Shares

376 பயணிகளுடன் துருக்கிய் நோக்கி வரும்போது தொடருந்து தீடிரென தடம் புரண்டது இதில் 24 பேர் உயிரிழந்தனர்.மற்றும் 124 பேர் படுகாயம் அடைந்தனர்.

பல்கேரியா நாட்டின் எடிர்னே பகுதியில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள ஹால்காலி தொடருந்து நிலையத்துக்கு 376 பயணிகள் மற்றும் 6 ரயில்வே ஊழியர்களுடன் தொடருந்து பயணித்தது.

தெகிர்டாக் பகுதியில் தொடருந்தின் ஆறு பெட்டிகள் எதிர்பாராத விதமான தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி 24 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்று அந்நாட்டு துணைத் தலைமை அமைச்சர் ரிசெப் அக்டாக் தெரிவித்துள்ளார்.

விபத்தில் 124 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்

மற்றும் துருக்கி ராணுவம் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்து தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்ற வருகின்றன.

இந்நிலையில் உயிரிந்த குடும்பத்தினருக்கு அந்த நாட்டின் தலைவர் ரிசெப் தாயிப் எர்டோகான் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

6061 total views