கணினி விசைப்பலகையில் பயன்படுத்தாத கீ-கள்!

Report
256Shares

ஒரு கணினி அல்லது லெப்டொப்பின் விசைப்பலகை மேல் பக்கமாக வரிசையாக அமைந்துள்ள எப் கீஸ் எனப்படும் பங்க்ஷன் பொத்தான்கள் ஒன்றும் தூசி சேகரிப்பதற்காக வைக்கப்படவில்லை. அவைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு செயல்களைச் செய்யும், மிகவும் பயனுள்ள ஷோர்ட்கட் பொத்தான்கள் ஆகும். அவைகள் என்னென்ன பயன்பாடுகளை வழங்குகிறது என்பதை பார்க்கலாம்!

F1 : கிட்டத்தட்ட எந்தவொரு ப்ரோகிரம் ஆக இருந்தாலும் சரி, ஹெல்ப் ஸ்க்ரீன் ஓப்பன் செய்ய இந்த கீ உங்களுக்கு உதவும்.

F2: இந்த கீயை உபயோகிப்பதின் மூலமாக நீங்கள் தேர்வு செய்துள்ள போல்டர்களின் பெயரை மாற்றி அமைக்கலாம்.

F3 : நீங்கள் உலாவிக்கொண்டிருக்கும் அக்டிவ் ப்ரவுஸர்களில் சேர்ச் பொக்ஸை திறக்க இந்த கீ பயன்படும்.

F4 :இந்த கீ, விண்டோஸ் எக்ஸ்பி-யில் மை கம்ப்யூட்டர் அல்லது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரில் பாரை திறக்க உதவும் மற்றும் ஓல்ட் உடன் இணைத்து பயன்படுத்தப்படும் பொழுது அக்டிவ் ஆக இருக்கும் விண்டோவை திறக்க உதவும்.

F5 : ஒரு வலைப்பக்கத்தையோ அல்லது விண்டோவின் டொக்குயுமென்ட்டையோ ரீலோட் செய்யவோ அல்லது ரிப்பிரஷ் செய்யவோ இந்த கீ உங்களுக்கு உதவும்.

F6 : பெரும்பாலான இன்டர்நெட் ப்ரவுசர்களில் கர்ஸரை அட்ரஸ் பார் நோக்கி நகர்த்த இந்த கீ பயன்படுகிறது.

F7 : மைக்ரோசொப்ட் வேர்ட் போன்ற மைக்ரோசொப்ட் அப்ளிகேஷன்களில், டொக்குயுமென்டில் உள்ள எழுத்துப்பிழை மற்றும் இலக்கண பிழைகளை கண்டறிய இந்த கீ உதவும்.

F8 : கம்ப்யூட்டரை டேர்ன் ஒன் செய்யும் போது விண்டோவில் பூட் மெனு அக்சஸ்தனை பெற இந்த கீ உங்களுக்கு உதவும்.

F9 : மைக்ரோசொப்ட் வேர்ட் டொக்குயுமெண்டை ரிப்பிரஷ் செய்யவும் மற்றும் மைக்ரோசொப்ட் மூலம் இ-மெயிலை அனுப்பவும் பெறவும் இந்த கீ உதவும்.

F10 : திறந்திருக்கும் அப்ளிகேஷனில் மெனு பாரை அக்டிவேட் செய்ய மற்றும் ஷிப்ட் உடன் இணைய, ரைட் கிளிக் செய்யும் அதே செயல்பாட்டை செய்ய இந்த கீ உதவும்.

F11 : இண்டர்நெட் ப்ரௌவுஸர்களில் புல் ஸ்க்ரீன் மோட்தனை எண்டர் செய்யவும், எக்சிட் செய்யவும் இந்த கீ உதவும்.

F12 : மைக்ரோசொப்ட் வேர்ட் டொக்குயுமென்டில் சேவ் ஆஸ் டயலாக் பொக்ஸை திறக்க இந்த கீ உதவும்.

7732 total views