வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது

Report
59Shares

யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸின் குற்றப் புலனாய்வு பிரிவினர் இவர்களைக் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 6ஆம் திகதி யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

2592 total views