பெண்கள் கழிவறையில் இரகசிய கமெரா

Report
52Shares

அனுராதபுர அரச வைத்தியசாலையில் கணக்காய்வாளர் பிரிவில் அமைந்துள்ள பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட கழிவறையில் இரகசிய கமெராவொன்றை பொருத்திய வைத்தியரொருவருக்கு எதிராக பொலிஸார் அனுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையை ஆராய்ந்த நீதிபதி, சம்பந்தப்பட்ட வைத்தியரை எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவராவார்.

அனுராதபுரம் அரச வைத்தியசாலையில் கணக்காய்வாளர் பிரிவில் பணியாற்றும் பெண்கள் சிலர் சமர்ப்பித்த புகாரையடுத்தே பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வைத்தியரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் அவர் மீது விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

கைவிரல் அடையாளம் தொடர்பான விசாரணைகள் மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலை ஊழியர்கள் வழங்கிய வாக்குமூலங்களைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வைத்தியருக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சந்தேக நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் இருப்பதாக சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனையை அடுத்து குறித்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.

1950 total views