குழந்தைக்கு தன்னுயிரைக் கொடுத்து உலகை விட்டுப் பிரிந்த தாய்..!

Report
99Shares

மாத்தறையில் பெண் குழந்தையொன்றை பிரசவித்த இளம் தாயொருவர் பிரசவித்து சில மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை மாகந்துர தலஹகம பிரதேசத்தைச் சேர்ந்த நிலூகா என்ற 27 வயதுப் பெண் கடந்த 6 ஆம் திகதி பிரசவத்திற்காக கம்புருபிடிய ஆதபான அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் மாத்தறை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. எனினும் குழந்தை பிறந்து 4 மணி நேரத்தின் பின்னர் இந்த இளம் தாய் உயிரிழந்துள்ளார்..

அவரை காப்பாற்றுவதற்காக சிறப்பு மருத்துவ குழுவினர் கடுமையாக முயற்சித்துள்ள போதும் அது வெற்றியளிக்கவில்லை.

குழந்தை தற்போது மாத்தறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் குழந்தை நலமுடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

4206 total views