மத்திய கிழக்கில் அடிமைகளாக நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பெண்கள்

Report
153Shares
advertisement

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்ப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைநிலை சேவகம் செய்வதற்காக அனுப்பப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்று இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

போரினால், பாதிக்கப்பட்டு கணவர்மாரை இழந்த குடும்பங்களுக்கு தலைமை தாங்கும் பெண்கள் தமது குடும்பங்களை காப்பாற்றுவதற்காக மத்திய கிழக்கு நாடுகளின் பணிகளுக்கு உடன்படுகின்றனர்.

எனினும் அவர்கள் ஓமானின் மஸ்கட் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல பெண்களின் தகவல்களின்படி மஸ்கட் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் அங்கு ஒரு சிறிய அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பணியாற்ற பணிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இரவில் மீண்டும் சிறிய அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தம்மைப் போன்று பல பெண்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தாக அங்கிருந்து இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். தமக்கு உரிய சம்பளங்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்படி 2015- 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுமார் 1000 அளவிலான வடக்கு, கிழக்கு பெண்கள் சென்றுள்ளனர்.

இவர்கள் குடும்பங்களுக்கு தலைமை தாங்கும் பெண்களாவர் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

5692 total views
advertisement