இந்தியாவுக்கு எதிரான போருக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம்! சீனா எச்சரிக்கை

Report
483Shares
advertisement

இந்தியாவுக்கு எதிரான போருக்கு கவுண்ட் டவுன் தொடங்கி விட்டதாக சீன அரசுப் பத்திரிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிக்கிம் மாநில எல்லையில் உள்ள தோக்லாம் பீடபூமி விவகாரத்தில் இரு நாடுகள் இடையிலான பிரச்னை தொடங்கி 50 நாள்கள் ஆன நிலையில், இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் சீனப் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.

தோக்லாம் பகுதியிலிருந்து தங்களின் படைகளை இந்தியா திரும்பப் பெறாதவரை, இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை என்றும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகள் இடையிலான பிரச்னை தொடங்கி 7வது வாரத்தைக் கடந்த நிலையில், அமைதி தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி வருவதாகவும் அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா-பூடான்-சீனா ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியாக அமைந்துள்ள தோக்லாம் பகுதி, தங்களுக்கே சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

அந்தப் பகுதியில் சாலை அமைக்க முயற்சித்த சீனாவின் முயற்சிக்கு இந்தியா தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டது. இதையடுத்து, தோக்லாம் எல்லைப்பகுதியில் இருநாடுகளும் ராணுவ வீரர்களைக் குவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து பேசிய சீன வெளியுறவுத் துறை அதிகாரி வாங் லீ, தோக்லாம் பகுதியில் படைகளைக் குவிக்கும் இந்தியாவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்தப் பகுதி போல மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடம் இந்தியா-சீனா இடையே அதிகம் இருக்கிறது.

இருநாடுகளின் எல்லைகளும், நேபாளத்தில் எல்லையும் சந்திக்கும் உத்தராகண்ட்டின் கல்பானி பகுதி மற்றும் பாகிஸ்தானுடனான எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆகிய பகுதிகளுக்குள் சீன இராணுவம் நுழைந்தால், அதை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா என்று கேள்வி எழுப்பினார்.

19354 total views
advertisement