பாதுகாப்பு செயலாளர் – பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

advertisement

பங்களாதேஷின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமீதுல்லாஹ் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்னவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிவரும் நல்லுறவு பற்றியும், இன்னும் முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

அத்தோடு இச்சந்திப்பின் இறுதியில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின் போது பங்களாதேஷின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்புப் பிரிவின் ஆலோசகர் அஸ்லம் பர்வேஸும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

advertisement