பஸ் நடத்துனரிடம் கொள்ளை: இரண்டு சந்தேகநபர்கள் கைது

advertisement

பதுளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நடத்துனர் ஒருவரை தாக்கி பணம் பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் இருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் நடத்துனரை தாக்கி அவரிடமிருந்த 14,917 ரூபா பணத்தை கொள்ளையடித்தமை மற்றும் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மீகஹகிவுல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று (10) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்தது வருகின்றனர்.

advertisement