10 வெளிநாட்டு உடன்படிக்கைகள் கைச்சாது..

Report
159Shares

இந்த வருடம் முதல் 2020 ஆம் ஆண்டுவரை 244 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கடனாக வழங்கப்படவுள்ளது.

இந்த கடனை பெற்றுக்கொள்வதற்கு 10 வெளிநாட்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கையின்படி 174.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்படவுள்ள, அதேவேளை 69.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை பௌதீக வலங்களாக வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய வங்கி, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் இந்த கடன் உதவிகளை வழங்கவுள்ளன.

விவசாயம், நீர்வழங்கல் மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்காக இந்த வெளிநாட்டு கடன்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடன் தொகையானது இலங்கை ரூபாயில் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய்களாகும்.

5550 total views