தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற மாகாணசபை தவறியுள்ளது

Report
7Shares

பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் தமிழ் மக்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட வடமாகாணசபை அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற தவறியுள்ளதாக புதிதாக மாகாணசபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அந்த பாதிப்புக்களில் இருந்து அவர்களை மீட்க வேண்டிய பொறுப்பு வடமாகாணசபைக்கு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடமாகாணசபையின் 101 ஆவது அமர்வு யாழ்ப்பாணம் - கைதடியில் அமைந்துள்ள மாகாணசபை கட்டடத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த அமர்வில் புதிய உறுப்பினராக பொறுப்பேற்று கன்னியுரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம், வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும் இணைத்து திட்டக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

901 total views