காதலியை நிர்வாணமாக்கி மூழ்கடித்துக் கொன்ற பிக்குவுக்கு நேர்ந்த கதி!

Report
58Shares

இங்கிரிய – நாச்சிமலை ஆற்றில் தனது காதலியை நிர்வாணமாக்கி நீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பான குற்றவாளிக்கு, பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க இன்று மரண தண்டனை வழங்கினார்.

முன்னாள் இளைய பிக்குவும், முச்சக்கர வண்டி சாரதியுமான ஹேனகம ரத்னசிறி என்ற கொடிதுவக்கு ஆரச்சி பிரேமலால் என்பவருக்கே இந்த தணடனை வழங்கப்பட்டுள்ளது.

34 வயதான இவர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

2010ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி, அவரின் காதலி என கூறப்படும் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த சுனேத்ரா பிரியதர்ஷனி என்பரை நிர்வாணப்படுத்தி குறித்த ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்தமை தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் நீண்டகால விசாரணையை மேற்கொண்ட நீதிபதி இன்று அவருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பெண்ணுடன் நீண்ட காலமாக காதலில் ஈடுபட்ட வந்த குறித்த நபர், பின்னர் அவரிடம் பணத்தினை பெற்று கொண்டு காதல் உறவை முறித்த நிலையில் கொரியா சென்றுள்ளார்.

இதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கு பிறகு அவர் நாடு திரும்பியுள்ள நிலையில், அந்த பெண் மீண்டும் அவரை தேடி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர், அவரை திருமணம் செய்வதாக கூறி அந்த பெண்ணின் பெற்றோரிடம் இவர் வாக்களித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற அன்று திருமணத்திற்கு தேவையான ஆடைகளை கொள்வனவு செய்வோம் என கூறி அவரை கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மறுநாள், அந்த பெண்ணின் சடலம் நாச்சிமலை ஆற்றில் இருந்து இங்கிரிய காவற்துறையால் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடைகள் ஆற்றின் அருகில் இருந்த மரமொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தண்டனைக்கு முன்னர் உரையாற்ற அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட நிலையில், தான் 15 வருடமாக பல்கலைக்கழகத்தில் பயின்றதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் கொரியா சென்றதாக குறிப்பிட்ட அவர், பின்னர் நாடு திரும்பி முச்சக்கர வண்டி சாரதியாக பணியாற்றியதாகவும்,

தான் நிரபராதி எனவும் தெரிவித்துள்ளார்.

2849 total views