கட்டுநாயக்கவில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய விமானம்.!

Report
254Shares

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமாக கருதப்படும் ஏ-380 விமானம் டுபாயிலிருந்து உத்தியோகபூர்வமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் தரை இறங்கியது.

குறித்த விமானத்தில் கண்காணிப்பு செயற்பாடுகள் ஏனைய பயணிகள் விமான சேவைகளைப்போல் முன்னெடுக்கபடவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

இவ்வருட முற்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுதளம் புனரமைக்கப்பட்டதன் பின்னர், நவீன விமானங்கள் தரையிறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் 540 பயணிகனிகள் பயணிக்ககூடிய எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ-380 விமானம் தினந்தோறும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் எனவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த விமான சேவை டுபாயிலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7827 total views