யாழில் வாள்வெட்டுச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நபர் ஜேர்­ம­னியில்.?

Report
602Shares

யாழ்ப்­பா­ணத்தில் வாள்­வெட்­டுக்கள் மற்றும் சமூக விரோத குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்கி அவர்­க­ளோடு இக்குற்றச் செயல்­களில் தொடர்­பு­பட்ட நப­ரொ­ருவர் ஜேர்­ம­னியில் இருப்­பது தொடர்­பான தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக வடக்­கு­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.

நேற்று செவ்­வாய்­கி­ழமை வடக்கு மாகாண முத­ல­மைச்சர் தனது அலு­வ­ல­கத்தில் யாழ்.குடா­நாட்டின் நில­மைகள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக பொலி­ஸா­ருடன் சந்­திப்­பொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். இச் சந்­திப்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெர்­னான்டோ, யாழ்.பிராந்­திய சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஸ்ரேணிஸ்லஸ், காங்­கே­சன்­துறை சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் மாசிங்க, உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்கள் மற்றும் யாழி­லுள்ள பொலிஸ் நிலை­யங்­களின் பொறுப்­ப­தி­கா­ரிகள் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

பொலி­ஸா­ருடன் முத­ல­மைச்சர் மேற்­கொண்ட இந்த இரண்­டா­வது சந்­திப்­பா­னது காலை 9.30 மணிக்கு ஆரம்­ப­மாகி முற்­பகல் 11மணி­வரை இடம்­பெற்­றது. சந்­திப்பின் போது பல்­வேறு விட­யங்கள் தொடர்­பா­கவும் கடந்த மாதம் 14ஆம் திகதி இடம்­பெற்ற பொலி­ஸா­ருடன் சந்­திப்பில் ஆரா­யப்­பட்ட விட­யங்­களின் நட­முறை முன்­னேற்­றங்கள் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இச் சந்­திப்­பினை தொடர்ந்து பத்­தி­ரி­கை­யாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்ட விட­யத்தை தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரிவி க்கையில்,

கடந்த மாதங்­களில் இளைஞர் குழுக்­களால் மேற்­கொள்­ளப்பட் சமூக விரோத குற்றச் செயல்கள் தொடர்­பாக இக் சந்­திப்பில் ஆரா­யப்­பட்­டது. குறிப்­பாக கடந்த ஒரு மாத காலத்தில் இவ்­வா­றான குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­வோரை கைது செய்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட சட்ட நட­வ­டிக்­கை­களை அடுத்து ஆவா குழு­வினை சேர்ந்த பலர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ர­வு­களின் அடிப்­ப­டையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வ­ரு­கின்­றது.

கடந்த முறை பொலி­ஸா­ருடன் மேற்­கொண்ட சந்­திப்பில் குற்றச் செயல்­களை தடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என கூறப்­பட்­டி­ருந்த நிலையில் அந் நட­வ­டிக்­கையில் தற்­போது முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது

கேள்வி பொலி­ஸா­ருடன் கடந்த மாதம் மேற்­கொண்ட சந்­திப்பில் குற்றச் செயல்­களில் ஈடு­படும் இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்டால் அவர்­களின் பின்­புலம், அவர்­க­ளுக்கு பணம் கிடைக்கும் வழிகள் தொடர்­பாக ஆராய்ந்து அறிக்கை சமர்­பிக்­கு­மாறு கூறி­யி­ருந்­தீர்கள் அது தொடர்­பான தக­வல்கள் தற்­போது கிடைத்­துள்­ளதா ?

பதில் குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­வர்­க­ளுடன் தொடர்­பு­பட்ட மற்றும் இங்­குள்­ள­வர்­க­ளுக்கு நிதி வழங்­கு­கின்ற நபர் ஒருவர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச பொலிஸாருக்கு தகவல் வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். அத்துடன் குறித்த நபரை கைது செய்வது மற்றும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டியவை நடவடிக்கைகள் தொடர் பில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

21087 total views