கமராவில் சிக்கிய சந்தேகநபர்

advertisement

ஹற்றனில் பிரபல வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கண்காணிப்பு கமராவின் உதவியுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் அதிகாலை ஹற்றன் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கொள்ளைச் சம்வமொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் நேற்று நாவலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த நபர் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வர்த்தக நிலையத்தில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கமராவின் காட்சிகளைக் கொண்டே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 10,000 ரூபா பணமும், ஒருதொகை கைபேசி மீள் நிரப்பு அடைகளும் கைப்பற்றப்பட்டதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று ஹற்றன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹற்றன் பொலிஸார் கூறியுள்ளனர்.

advertisement