யாழில் உயிரிழந்த அதிகாரி! பொலிஸ் நிலையத்தில் மனைவியின் நிலை

advertisement

யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திரவின் மனைவி இன்றைய தினம் பள்ளம பொலிஸ் நிலையத்தில் சேவையை பதிவு செய்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கிய போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த பொலிஸ் சர்ஜன்ட் உயிரிழந்தார்.

அவரது மனைவி திருமணத்திற்கு முன்னர் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவை செய்துள்ளார்.

இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் அவர் சேவையில் பதிவு செய்யாமையினால் சேவையை கைவிட்டு சென்றதாக கருதப்பட்டார்.

தனது கணவர் உயிரிழந்த பின்னர் அவரை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியது.

எனினும் இதுவரை அவருக்கு சீருடை கிடைக்காமையினால் சிவில் உடையில் அவர் தனது சேவையை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

advertisement