முகமாற்று சிகிச்சை செய்தமையினால் நடந்த விபரீதம் !

Report
59Shares

வடகொரியா விமான நிலையத்தில், கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம் நேரில் வந்த பெண்களுக்கு ஒத்துப்போகவில்லை என கூறி, சீனாவைச் சேர்ந்த மூன்று பெண்களை விமான நிலைய அதிகாரிகள் விமானத்தில் ஏற மறுத்துள்ளனர்.

சீனாவில் 'கோல்டன் வீக்' (Golden week) எனப்படும் எட்டு நாள் விடுமுறை, கொடுக்கப்படும். அந்த விடுமுறை நாட்களின் போது சீனர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வருவார்கள்.

சீனர்கள் பெரும்பாலும் முகமாற்று அறுவை சிகிச்சை [பிளாஸ்டிக் சர்ஜரி] செய்துகொள்ள வடகொரியா நாட்டுக்குச் செல்கின்றனர்.

இப்படி இருக்கும் நிலையில், சீனாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் வடகொரியாவிற்கு சென்று முகமாற்று அறுவை சிகிச்சை செய்துவிட்டு சீனாவுக்குச் செல்ல விமான நிலையம் வந்துள்ளனர்.

ஆனால், அங்கு குடியேற்ற அலுவலகத்தில் (Immigration office) இவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

அவர்கள், முகமாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தமையினால், முகம் வீங்கியும் கட்டு போடப்பட்டு இருந்தன.

இதனால், கடவுச்சீட்டில் இருக்கும் புகைப்படத்துக்கும் நேரில் பார்க்கும் முகங்களுக்கும் வேறுபாடு இருந்ததால், அவர்களை விமானம் ஏற அனுமதிக்கவில்லை.

எல்லா சான்றிதழ்களும் இருந்தும், தங்களுடைய நாட்டுக்குச் செல்ல முடியாமல் அவர்கள் தவித்துள்ளனர்.

2924 total views