6 மாதங்களின் பின்னர் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சடலம்

Report
21Shares

மத்திய கிழக்கு நாடொன்றுக்குத் தொழிலுக்குச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் 6 மாதங்களின் பின்னர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பசறைப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான அவர், மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்று பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொண்டார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

அவர் உயிரிழந்த விடயம் தமக்கு 6 மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவரது சடலம் வானூர்தி ஊடாக நேற்று இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது.

1569 total views