ஐ.எஸ். தீவிரவாதிகளின் கடைசி கோட்டையை மீட்டதாக சிரிய அறிவிப்பு

Report
62Shares

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கடைசி கோட்டையாக கருதப்பட்ட அல்பு கமல் நகரை நேற்றையதினம் மீட்டுள்ளதாக சிரியா ராணுவம் அறிவித்துள்ளது. ஆத்துடன் குறித்த நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ள போதும் சிரியா ராணுவம் இதனை உறுதி செய்யவில்லை.

சிரியாவில் பெரும் பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் அரச படைக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இரச படைக்கு ஆதரவாக ஆதரவாக ரஸ்ய விமானப் படையும் ஈரான் அரசு, ஹிஸ்புல்லா அமைப்பு என்பன ஆதரவளித்து வந்தன.

இந்தநிலையில் சிரியாவின் முக்கிய நகரங்களை அந்த நாட்டு ராணுவம் படிப்படியாக மீட்டு வந்தநிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கடைசி கோட்டையாக கருதப்பட்ட அல்பு கமல் நகரும் மீட்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

2046 total views