18 வயதான சுவிஸ் யுவதிக்கு இலங்கையில் நேர்ந்த கொடூரம்!

Report
866Shares

இலங்கைக்கு சுற்றுலா பயணியாக வருகை தந்த சுவிசர்லாந்து நாட்டின் யுவதியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

இலங்கை பிரஜையொருவரால் அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக, நேற்று மாலை 5.00 மணியளவில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் அமைந்துள்ள சிங்கல்ட்ரீ வனப்பகுதிக்கு தனியாக சென்ற போதே குறித்த யுவதியை நபரொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

வனத்திலிருந்து திரும்பிய சுவிசர்லாந்து நாட்டை சேர்ந்த 18 வயது யுவதி இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

தான் தங்கியிருந்த விடுதியின் முகாமையாளருக்கு இது தொடர்பில் கூறிய நிலையில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், நுவரெலிய - ஸ்க்ராப் தோட்டத்தை சேர்ந்த 15 பேர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

30024 total views