பாகிஸ்தான் உளவு பெண்களுடன் செக்ஸ் சாட்டிங் செய்த இந்திய விமானப்படை கேப்டன்!

Report
25Shares

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை கேப்டன் ஒருவர், இந்திய விமானப்படை உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் குரூப் கேப்டனாக பணியாற்றியவர் 51 வயதாகும் அருண் மர்வாஹா. கடந்த மூன்று வாரங்களாக இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 பெண்கள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் கிளுகிளுப்பான சாட் செய்துள்ளனர்.

நாளடைவில் 2 பெண்கள் உடனான செக்ஸ் சாட்டிங் அதிகரித்து வந்துள்ளது. திடீரென ஒருநாள் அவர்கள் இந்திய விமானப்படையின் ரகசிய ஆவணங்களை அருணிடம் கேட்டுள்ளனர். அருணும் ரகசிய ஆவணங்களை யாருக்கும் தெரியாமல் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த புகைப்பட விவகாரத்தை கண்டுபிடித்த விமானப்படை உளவுப் பிரிவிரினர் அவரை கைது செய்து 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டனர். இந்நிலையில் அவரை ஃபேஸ்புக்கில் தொடர்பு கொண்ட 2 பெண்களும், பாகிஸ்தானின் உளவுத்துறை ஐஎஸ்ஐ ஆட்கள் என தெரியவந்துள்ளது.

978 total views