8325 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று

Report
9Shares

புதிய தேர்தல் முறைமையின் கீழ் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகிறது.

இதற்கமைய 25 மாவட்டங்களிலுமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

உள்ளூராட்சி சபைகளுக்கான 8 ஆயிரத்து 325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 43 அரசியல் கட்சிகளும் 222 சுயேச்சைக்குழுக்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

13 ஆயிரத்து 374 வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று காலை சரியாக 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் தேர்தல் நடைபெறும்.

452 total views