அமெரிக்கத் தூதரகப் பணிகள் வழமைக்குத் திரும்பின

Report
0Shares

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக செயலிழந்த அமெரிக்க தூதரகத்தின் பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்றிரவு அறிவித்துள்ளது.

அரசுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், அமெரிக்க அரசுப் பணியங்கள் பல மூடப்பட்டன.

இதனால் சிறிலங்காவில் உள்ள அமெரிக்க மையமும் மூடப்பட்டது.

எனினும், இரண்டு ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று ஒப்பமிட்டதை அடுத்து, நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

கொழும்பில் அமெரிக்கத் தூதரகப் பணிகளும் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், அமெரிக்கத் தூதரக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

total views