கனடாவில் கொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை அகதி விடுதலை!!

Report
78Shares

தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதியினை கனேடிய நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த கொலை தொடர்பான விசாரணை மீள பரிசீலிக்கப்பட வேண்டும் என கனேடிய அரச தரப்பினரின் வேண்டுகோளை குபேக் மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எப்படியிருப்பினும், இவர் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனேடிய உயர் நீதிமன்ற சட்டத்திற்கு அமைய குறிப்பிட்ட காலவரையை மீறியதன் காரணமாக விசாரணையை தொடர முடியாது என கூறியே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கனேடிய மொன்றியலில் உள்ள அவரது தொடர்மாடியில் வைத்து, 2012ஆம் ஆண்டு 21 வயதான அவரது மனைவியின் உடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2866 total views