ஆட்டம் காணும் கூட்டரசாங்கம்

Report
21Shares

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள், அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தற்போதைய நிலைவரத்தின் பிரகாரம் பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இறுதித் தேர்தல் முடிவு வெளியானதும் சு.க. உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேவேளை, தம்முடன் இணைந்து பணியாற்றுபவர்களை இணைத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும், அவர்களுக்காக தமது கட்சியின் கதவு திறக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1198 total views