அரசியலில் திடீர் மாற்றம் – நாட்டை விட்டு வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி!
Reportமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இலங்கையை விட்டுச் சென்று இங்கிலாந்தில் குடியேறவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்க சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக இருந்த அத்தனகல்ல பிரதேசத்தில், சுதந்திரக்கட்சி படு தோல்வியடைந்த காரணத்தினால் அவர் மனவிரக்தியடைந்து இங்கிலாந்து செல்லவுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்திரிக்காவின் அதிகாரத்தின் கீழ் இருந்த அத்தனகல்ல பிரதேசத்தை இம்முறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு பொதுஜன பெரமுன கைப்பற்றியிருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்க விடயமாகும்.
அதனைத் தொடர்ந்து சந்திரிக்கா தனது மகனான விமுக்தி குமாரதுங்கவை அரசியலில் ஈடுபடுத்தும் முயற்சியினைக் கைவிட்டுள்ளதாகவும், இங்கிலாந்து செல்லும் அவர் அங்கு நிரந்தரமாக குடியேறும் நிலை காணப்படுவதாகும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன முற்றும் எதிர்பார்க்காத வகையில் மஹிந்த தரப்பின் பொதுஜன பெரமுன அமோக வெற்றியை ஈட்டியிருந்தது.
இதன் காரணமாக அரசியலில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்படலாம் என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.