யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சிறிய ரக வாகனங்கள்

Report
129Shares

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார்களின் கண்காட்சி பழைய இயந்திர உருக்கு பொருட்களை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சிறிய ரக வாகன்களின் கண்காட்சி ஒன்று நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருந்தது இதில் “Jaffna style gokart”, “Solar powered baby car”, “pedal power car”, “Ultralight pickup” உள்ளிட்ட நான்கு வகையான கார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலப் போதனா மொழியியல் துறைப் பேராசிரியர் மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர் அவர்களின் பணச்செலவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சில வல்லுனர்கள் இணைந்து இதனை செய்திருந்தனர் - இதில் முக்கியமாக கொக்குவில் பகுதியைசேர்ந்த சிறந்த மெக்கானிக் ஒருவரின் பங்கு அளப்பரியது - முன்னாள் புகையிரத இயந்திர திருத்துனரின் மகனான இராசன் என்பவர் இந்த கார்களின் வடிவமைப்பு உட்பட இயந்திர சாதனங்களின் பொருத்துகைகளை நுட்பமாக செய்திருந்தார் என கூறப்படுகின்றது - இவர் ஆரம்ப காலத்தில் விமானம் ஒன்றை செய்து பறக்கவிட்ட சாதனையாளர் என்பதும் இங்கே குறிப்பிடவேண்டிய விடயம் .

மேற்படி இந்த கார் உற்பத்தி என்பது தமிழர்களை பொறுத்தவரை மிகப்பெரிய சாதனை முயற்சியாகவே கொள்ளப்படவேண்டும் .

ஏனைய நாடுகள்போல் எமது நாட்டிலும் தொல்நுட்பம் மற்றும் இயந்திர உற்பத்தி அதிகாரங்களை இப்படியான வல்லுனர்கள் செயற்படுத்தும் வகையில் அமைப்பார்கள் எனில் மிக அபரிமிதமான செயற்பாடுகளை தமிழன் செய்ய சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு - இந்த செயலை பாராட்டி அவர்களின் குழுவுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் நல்கி அவர்களின் திறமையையும் சேவையையும் போற்றுவோம் .

6240 total views