காணாமற்போன சைக்கிள் ஓட்ட வீரரின் சடலம் மீட்பு

Report
31Shares

இலங்கையில் நடைபெறும் Rumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள வருகைதந்து, ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த காத்மண்டு சைக்கிள் ஓட்ட வீரரின் சடலம் மீட்கப்பட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாராயணன் கோபால் மஹாராஜன் எனும் சைக்கிள் ஓட்ட வீரரே இவ்வாறு குடா ஓயவில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடா ஓயவிற்கு அருகில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்து குறித்த வீரரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தினால் 5 நாட்களுக்கு இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த வீரர் உயிரிழந்தததை அடுத்த இப்போட்டிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த போட்டியில் ஐக்கிய இராச்சியம், ஜேர்மன், இத்தாலி, நேபாளம் மற்றும் சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 39 வீரர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் நேபாளத்தை பிரதி நிதித்துவப்படுத்தி மூன்று வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Rumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டி, ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான 5 நாட்களுக்கு மத்திய மலைப்பகுதிகளில் உள்ள நான்கு மாவட்டங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1481 total views