ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது

Report
14Shares

நேற்று (09) இரவு கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

தமக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் செய்த பொழுது டொல்பின் ரக வாகனத்துடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களை கிளிநொச்சி பொலிஸார் மூலம் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

வலம்புரி சங்கை கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் கடத்த முயன்ற குற்றத்தின் அடிப்படையிலேயே விசேட அதிரடிப்படையினர் வழக்குத் தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

759 total views