அஞ்சலில் உயிர் பாம்புகளை கடத்த முனைந்தவர் கைது!

advertisement

கனடிய மனிதரொருவர் உயிருள்ள பாம்புகளை மெயிலில் சீனாவிற்கு அனுப்ப முயன்றதாக நியு யோர்க் மத்திய வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

28-வயதுடைய மிசிசாகா ஒன்ராறியோவை சேர்ந்த சொய் லி என்பவர் வெள்ளிக்கிழமை ஷங்காயிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த விமானத்திலிருந்து இறங்கிய சமயம் கைது செய்யப்பட்டதாக பவ்வலோ யு.எஸ். வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவர் முன்பு- மலைப்பாம்புகள் உட்பட்ட-55-உயிருள்ள ஊர்வன வகைகளுடன் ரொறொன்ரோவிலிருந்து சீனாபயணத்தின்போது சிக்காக்கோவில் பிப்ரவரி 2014ல் கண்டு பிடிக்கப்பட்டார் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சட்டத்தின்கீழ் அனைத்தும் பாதுகாக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு மாதங்களின் பின்னர் யு.எஸ்சிலிருந்து கனடா வந்த போது ஒரு வகை அல்பினோ வெஸ்ரேன் ஹொக்-நோஸ்ட் பாம்புகளை தனது காலுறைகளிற்குள் ஒளித்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குவார் எனவும் பவ்வலோவிற்கு திருப்பி அனுப்ப படுவார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

advertisement