உங்கள் ஐபோன் வேகமாக செயல்பட சில வழிமுறைகள் இதோ!!!!

Report
324Shares
advertisement

*அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வேண்டும் . ஏனெனில் அவை அதிக அளவு இடங்களை ஐபோனில் ஆக்கிரமிப்பு செய்து ஐபோனை மெதுவாக இயங்கவைக்கும் .

இவை எந்த அளவுக்கு இடங்களை ஆக்கிரமித்து கொண்டுள்ளன என்பதை அறிய போனில் Settings > General > Storage & iCloud Usage > Manage Storage.- க்கு சென்று பார்த்தால் அறியலாம் . இதனால் மிக முக்கியமான பயன்பாடுகளை மட்டும் சேமித்து வைப்பது நன்று.

*ஐபோனை உங்களது கணினி போன்று பயன்படுத்த வேண்டும். அதாவது அடிக்கடி இணைய தேடல் வரலாறுகளை நீக்கிக் கொண்டே இருப்பது அவசியமே. இடைமாற்று நினைவகம் என்று கூறப்படுகின்ற அதாவது பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகத்தினை அடிக்கடி அழித்து விடுவது அவசியம் . இதற்கு மொபைலில் Settings > Safari,-க்கு சென்று Clear History and Website Data வை தட்டினால் போதும்.

*உங்கள் ஐபோன் மெதுவாக இயங்க ஒரு முக்கிய காரணம் அதிலிருக்கும் பயன்பாடுகளின் ஆட்டோ அப்டேட்டுகலாகத்தான் இருக்கும். தேவையற்ற பயன்பாடுகளின் அப்டடேட்டுகளை நீக்க இது ஒரு சிறந்த வழியாகும். இதற்கு உங்கள் மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று OFF MODE யை தேர்ந்தெடுக்க வேண்டும்.

*அன்றாடம் முடிந்த வரையில் ஒருமுறையாவது ஐபோனை ரீஸ்டார்ட் செய்வதும் மொபைல் வேகத்தை அதிகரிக்கும் வழிகளில் ஒன்றே ! இதனால் ஐபோன் அடிக்கடி மந்தாமாகாமல் தடுக்கலாம்.

இது போன்ற வழிமுறைகளை கடைபிடித்தால் ஐபோனின் ஆயுள்காலத்தினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் ஐபோன் சாதனம் மெதுவாக செயலபாடாமல் தடுக்கலாம்.

9707 total views
advertisement