உறவினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சிறுமி: காரணம் என்ன?

Report
475Shares

Jasmine Forrester என்னும் பிரித்தானியச் சிறுமி நேற்று மதியம் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

அவரது பாட்டி சத்தமிட்டு அக்கம்பக்கத்தோரை எழுப்பி பொலிசை அழைக்கும்படிக் கதறி அழ அவர்கள் பொலிசாருக்கு போன் செய்தனர்.

பொலிஸ் வந்தபோது அந்த 11 வயது சிறுமி தலையில் பலத்த காயத்துடனும் உடலில் பல இடங்களில் கத்திக்குத்துக் காயங்களுடனும் இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.

பொலிசார் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து அவளை மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி அவள் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்தக் கொலை தொடர்பாக 51 வயதுள்ள அவளது உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கையிலும் வெட்டுக்காயம் காணப்படுகின்றது..

அவரை பொலிசார் விசாரித்து வருகின்றனர். அக்கம்பக்கத்தோர் அந்தச் சிறுமி மிக இனிமையானவள் என்றும் அவளும் அவளது பாட்டியும் மிகவும் பக்தி உடையவர்கள் என்றும் ஞாயிறு தோறும் ஒழுங்காக அவர்கள் ஆலயத்திற்கு செல்வதைப் பார்த்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

15947 total views