7 இலட்சம் இரசாயன ஊட்டத்துக்குள்ளான முட்டைகள் இங்கிலாந்துக்குள் இறக்குமதி

advertisement

நெதர்லாந்துப் பண்ணையில் இருந்து சுமார் 700,000 இரசாயண ஊட்டத்துக்குள்ளான முட்டைகள் இங்கிலாந்துக்குள் இறக்குமதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது முந்தைய கணிப்பான 21,000 முட்டைகளை விடவும் மிக அதிகமானது.

இந்த சமீபத்திய எண்ணிக்கை, பிரிட்டனின் உணவுத் தரநிலைகள் முகவர் ஸ்தாபனத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வருடாந்தம் கொள்வனவு செய்யப்படும்முட்டைகளில் 0.007 வீதமாக மட்டும் இந்த எண்ணிக்கை இருப்பதனால், பொது மக்களின் சுகாதாரக் கேடுக்கான ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து மற்றும் பெல்ஜியப் பொலிசார், பூச்சிக்கொல்லியான ஃபிப்ரோனில்லைப் பயன்படுத்தும் பண்ணைகளைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியிலுள்ள பல்பொருள் அங்காடிகள், மில்லியன் கணக்கான முட்டைகளை விற்பனையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளன.

advertisement