பிரித்தானிய பிரதமரை கொல்ல சதி திட்டம்? இருவர் கைது…

Report
408Shares

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 28-ம் திகதி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஸகாரியா ரஹ்மான், அகியூப் இம்ரான் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் தெரேசா மே வசித்துவரும் லண்டன் நகரில் உள்ள 10 டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் வசித்து வருகின்ற நிலையில், அவர்கள் இருவரும் தெரேசா மேயை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்திய பின்னர்இதனை தெரிவித்துள்ள காவல்துறையினர் சக்தி வாய்ந்த குண்டுகள் தயாரித்து பிரதமரின் வீட்டை தாக்கி, அவரை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 12 மாதங்களில் 9 தீவிரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

10901 total views