காதல் ஜோடிகளுக்கு முன்மாதிரியாக அமைந்த ஒபாமாவின் ரொமான்ஸ் புகைப்படங்கள்

advertisement

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது மனைவியுடன் எடுத்த புகைப்படங்கள், அந்நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு முன் மாதிரியாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா மற்றும் மிச்சேல் ஒபாமா தம்பதியின் புகழ்பெற்ற ரொமான்ஸ் புகைப்படங்கள் அந்நாட்டு காதல் ஜோடிக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

கேசி மற்றும் ஆடம் என்ற அமெரிக்க காதல் ஜோடி, திருமணத்திற்கு முன்பாக எடுத்த போட்டோ ஷுட்டில் ஒபாமா-மிச்சேல் ஜோடியின் பிரபலமான ரொமான்ஸ் படங்களை ரோல் மாடலாக பயன்படுத்தி, அவர்களைப் போன்றே எடுத்துள்ளனர்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

advertisement