அமெரிக்காவில் வெள்ளப்பெருக்கில் சிறுவர்கள் உட்பட 9 பேர் பலி

Report
16Shares

கடும் மழை காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Arizona மாகாணத்தில் உள்ள Payson நகரில் Verde ஆறு உள்ளது. இந்த பகுதியில் இரு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வந்துள்ளது.

இந்நிலையில், Verde ஆற்றுக்கு வந்த மக்களும், சுற்றுலா பயணிகளும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து ஆற்றில் குளித்து கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட 9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், நீரில் அடித்து செல்லப்பட்ட சில நபர்களை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.

மீட்புகுழுவினர் படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

நீரில் மூழ்கி காணாமல் போனவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அழுது கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

இதனிடையில், தெற்கு Arizona பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Arizona முழுவதிலும் திங்கள் மாலை வரை கடும் மழை பெய்யும் எனவும் அதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

457 total views