குறைந்த ஊதியம் வழங்கும் இவான்கா - பெண் ஊழியர்கள் குற்றச்சாட்டு

advertisement

அமெரிக்க ஜனாதிபதியின் மகளும் தொழிலதிபருமான இவான்கா, தமது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு மிகவும் குறைந்த ஊதியம் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவான்கா டிரம்ப் ஆயத்த ஆடைகள் வடிவமைப்பு மற்றும் அதுசார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது நிறுவனத்தின் பொருட்கள் அமெரிக்காவின் முக்கிய வணிக வளாகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகின்றன. இதில் இவர் பெருந்தொகை லாபமாக ஈட்டியும் வருகிறார்.

இவரது நிறுவனத்தில் ஆசிய நாடுகளை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் பெருவாரியாக பணியில் இருப்பதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அதை பெருமையாகவும் சொல்லி வந்துள்ளார்.

ஆனால் அந்த தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவான ஊதியத்தை இவான்கா வழங்கி வருவதாக தற்போது குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

மட்டுமின்றி பெருந்தொகைக்கான ஆயத்த ஆடைகளை மிகவும் குறைந்த விலையில் வங்காளதேசம், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அதில் கொள்ளை லாபம் ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

வங்கதேசத்தில் ஆயத்த ஆடைகள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக சுமார் 53 பவுண்டு மட்டுமே வழங்கப்படுகிறது.

எத்தியோப்பியாவில் சீனர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனிடையே குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அவரது நிறுவனம் உரிய பதிலை அளிக்கும் எனவும், தொழிலாளர்களின் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படுவதாகவும் இவான்கா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

advertisement