வடகொரியா மற்றும் அமெரிக்காவின் வாய் போர்

Report
25Shares
advertisement

நெருப்புடன் விளையாடாதீர்கள் என வட கொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டும் தோனியில் பதிலடி கொடுத்துள்ளார்.

உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டுக்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா பொருளாதார தடை விதித்தது.

இந்நிலையில் மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளது.

இதற்கு டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார், அவர் கூறியதாவது இதுவரை காணாத அமெரிக்காவின் கோபத்தை இந்த உலகம் கண்டுவிடும். நெருப்புடன் விளையாடாதீர் என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், சில மணி நேரங்களிலேயே, அமெரிக்காவின் குவாம் தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரிய ராணுவம் அதிரடியாக அறிவித்தது. மேலும், அதிபரின் உத்தரவுக்காக மட்டுமே காத்திருப்பதாகவும் பதிலடி கொடுக்கப்பட்டது.

1537 total views
advertisement