சிறுமியை கொடுமைப்படுத்தி கொலை செய்த பெண்

Report
15Shares

உறவுக்கார சிறுமியை கொடுமைப்படுத்தி கொலை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் Arizona மாகாணத்தை சேர்ந்தவர் John Allen (29) இவர் மனைவி Sammantha Allen (28).

இவர்கள் வீட்டில் உறவுக்கார சிறுமியான Ame Deal (10) 2011ல் தங்கியிருந்தார். அவரை Sammantha தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த ஐஸ் குச்சியை Ame திருடியதாக தெரிகிறது. இதையறிந்து கோபமடைந்த John மற்றும் Sammantha சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பின்னர், Ame-ஐ சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து மூடி, வீட்டின் வெளியில் வைத்து விட்டு உள்ளே சென்று விட்டனர்.

பெட்டியின் உள்ளே மூச்சு விட முடியாமல் திணறிய Ame உயிரிழந்துள்ளார். 7 மணி நேரம் கழித்து Sammantha பெட்டியை திறந்த போது சிறுமி சடலமாக இருந்துள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் John மற்றும் Sammantha-வை கைது செய்தார்கள். இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தது.

இந்நிலையில், Sammantha மீது சுமத்தப்பட்ட கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

John மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கும் மரண தண்டனை கிடைக்கவே வாய்ப்புள்ளது.

அவர் மீதான வழக்கின் இறுதி வாதம் அக்டோபர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதனுடன் Ame-ஐ கொடுமைப்படுத்தியதில் தொடர்பு உள்ளதாக அவரின் 3 உறவினர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1126 total views