அமெரிக்காவின் குவாம் தீவின் மீது ஏவுகணை வீச வடகொரியா திட்டம்

Report
21Shares
advertisement

அமெரிக்க பசிபிக் பிராந்தியமான குவாமில் (Guam) ஏவுகணை தாக்குதலொன்றை நடத்த பரிசீலித்து வருவதாக வட கொரியா எச்சரித்துள்ளது.

வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி முகவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வட கொரிய ராணுவத்தின் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குவாம் பகுதியில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ராக்கெட்களை வீசும் திட்டம் ஒன்று குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையேயான இந்த தகவல் பரிமாற்றம் இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தீவிரமாக அதிகரித்துள்ளது.

வடகொரியாவுக்கு எதிராக மேலும் புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனைக்கு ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1438 total views
advertisement