ட்ரம்பின் முன்னாள் பிரசார தலைவரது வீட்டில் சோதனை

advertisement

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் முன்னாள் பிரசார தலைவரான போல் மனாபோர்ட்டின் வர்ஜீனிய வீட்டை, புலனாய்வுத் துறையினர் சோதனையிட்டுள்ளனர்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின்போது, ஆவணங்களும் ஏனைய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

செனட் புலனாய்வுக் குழுவை தானாகவே போல் மனாபோர்ட்டின் சந்தித்திருந்தார். இதன் பின்னரே, அவரது வீட்டில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற கடந்த தேர்தலின்போது, ரஷ்யாவின் தலையீடு இருந்துள்ளதாகக் கூறப்படும் பல விடயங்களில் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

advertisement