வாடகைக்கு வரும் டிரம்ப் வாழ்ந்த வீடு - வாடகை எவ்வளவு தெரியுமா?

Report
221Shares
advertisement

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வளர்ந்த வீடு வாடகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகரில் அமைந்துள்ள டிரம்பின் வீட்டை வாடகைக்கு எடுக்க நினைப்பவர்கள், நாள் ஒன்றுக்கு 777 டொலர் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

20 பேர் தங்கக்கூடிய இந்த வீடு வாடகைக்கு விடப்படும் என இணையம் மூலம் வீடு வாடகைக்கு விடும் சேவை செய்து வரும் ஏர் பி என் பி நிறுவனம் அறிவித்துள்ளது.

டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான பின்னர் இரண்டு மாதங்களில் குறித்த வீட்டை 2.14 மில்லியன் டொலர் மதிப்பில் விற்பனை செய்துள்ளனர்.

பின்னர் அருகாமையில் உள்ள பெரிய குடியிருப்பு ஒன்றில் டிரம்ப் குடும்பத்தினர் குடிபெயர்ந்துள்ளனர். இதனிடையே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டிரம்ப், சிறுவயதில் தாம் வாழ்ந்த வீட்டை திரும்ப வாங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இதுவரை டிரம்ப் குடும்பத்தினர் அந்த முயற்சியில் இறங்கவில்லை என்றே கூறப்படுகிறது.

குறித்த வீட்டில் 5 படுக்கை அறைகளும் 3 குளியல் அறைகளும் அமைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7304 total views
advertisement