அமெரிக்கா மீது ராக்கெட்டுகளை ஏவ திட்டமிடும் வடகொரியா

Report
50Shares
advertisement

அமெரிக்கா பகுதியான குவாம் அருகே நான்கு ராக்கெட்டுகளை ஏவும் திட்டம் மிக விரைவில் தயாராகிவிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

குவாம் மீதான ராக்கெட் தாக்குதலுக்கு வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அந்த நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடகொரியாவால் ஏவப்படும் வாங்சாங்-12 ரக ராக்கெட்டுகள் ஜப்பானை கடந்து குவாமில் சுமார் 30 கி.மீற்றர் தூரத்தில் உள்ளே தரையிறங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உலகில் இதுவரை கண்டிராத அளவுக்கு வடகொரியா மீதான தாக்குதல் இருக்கும் என எச்சரித்திருந்தார்.

மட்டுமின்றி வட கொரியாவின் நடவடிக்கைகள் அதன் ஆட்சி அதிகாரத்திற்கு முடிவுகட்டுவதற்காக கூட அமையலாம் என்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்ததனர்.

ஆனால் இந்த எச்சரிக்கையை புறந்தள்ளிய வடகொரியா, அமெரிக்க ஜனாதிபதி பொது அறிவே இல்லாமல் பேசி வருகிறார் என கிண்டலடித்திருந்தது.

இருப்பினும் வடகொரியா தாக்குதல் நடத்துமா என்பது சந்தேகமே எனவும், இதுபோன்ற ஒரு தற்கொலை முயற்சிக்கு கிம் ஜோங் உன் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குவாமை பாதுகாப்பது ஜப்பானின் கடமை என அந்த நாடு உறுதி அளித்துள்ளது.

ஆனாலும் ஜப்பான் அந்நாட்டு மக்களுக்கு ஏவுகணை தாக்குதலில் இருந்து எப்படி தப்புவது என பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

1689 total views
advertisement