வடகொரியாவின் ஏவுகணைகளை அழிப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு - ஜப்பான்

advertisement

அமெரிக்காவின் ஆளுகைக்குட்பட்ட குவாம் தீவின் மீது வடகொரியா செலுத்தும் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு என ஜப்பான் இராணுவ அமைச்சர் ஒனோடெரா தெரிவித்துள்ளார்.

குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா அறிவித்துள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ்சபை குழுவில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளர்.

வடகொரியாவால் ஏவப்படும் ஏவுகணைகள் குவாம் தீவின் அருகே 30 கிலோமீற்றர்கள் தொலைவில் விழும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், ஜப்பானின் ஷிமொனே, ஹிரோஷிமா, கொய்ச்சி மாநிலங்களின் மேலாக குறித்த ஏவுகணைகள் பறந்து செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே ஜப்பான் இராணுவ அமைச்சர் குறித்த ஏவுகணைகளை தாக்கி அழிப்பதற்கு ஜப்பானின் சட்டத்தில் இடமுண்டு என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பசிபிக் பகுதி நோக்கி ஏவுகணை செலுத்தப்பட்டால் அதைத் தாக்கி அழிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வடகொரியாவினால் செலுத்தப்படும் குறித்த ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் திறன் தற்போது ஜப்பானிடம் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement