பாரிய மரணத்தை ஏற்படுத்தும் மூன்றாம் உலகப் போர் ஓரிரு வாரங்களில் ஆரம்பம்?

Report
460Shares

இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகும் எனவும், இதன் போது பேரழிவை ஏற்படுத்தக் கூடிய மரணங்கள் நிகழும் எனவும் ஹொராசியோ வில்லேகாஸ் எனும் மறைஞானி எதிர்வு கூறியுள்ளார்.

இந்த அணு ஆயுதப் போராட்டமானது, கன்னி மரியாள் போர்த்துக்கல்லுக்கு விஜயம் மேற்கொண்டதனை குறிக்கும் வகையிலான நூற்றாண்டு விழாவையொட்டி ஆரம்பமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

1917ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதிக்கும், அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் 6 வேறுபட்ட தருணங்களில் கன்னி மரியாள் போர்த்துக்களில் உள்ள 3 இடைய சிறுவர்களுக்கு காட்சியளித்ததாக கூறப்படுகின்றது.

இதன்போது இரண்டாம் உலகப் போர் மற்றும் ரஷ்யாவிலான மாற்றம் குறித்து கன்னி மரியாளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பின்னர் உண்மையில் நடந்துள்ளதாக அவரது அந்தக் காட்சியளிப்புகள் உலகப் பிரபலம் பெற்றன.

இந்நிலையில், கன்னி மரியாள் காட்சியளித்ததாக கூறப்படும் மே மாதம் 13ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பாரிய நாசத்தை ஏற்படுத்த கூடிய போர் ஒன்றை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என ஹொராசியோ வில்லேகாஸ் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த போரினது அதிகளவு நாசத்தையும் மரணத்தையும் ஏற்படுத்தக் கூடும் என ஹொராசியோ வில்லேகாஸ் எதிர்வு கூறியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் எனவும், டொனால்ட் ட்ரம்ப் சிரியா மீது தாக்குதல் நடத்துவார் எனவும் ஹொராசியோ வில்லேகாஸ் சரியாக எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

12865 total views