குவாம் தீவு தாக்குதல்: வடகொரிய தலைவருக்கு விளக்கம்

advertisement

அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய தீவான குவாமில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை, வடகொரிய அதிகாரிகள் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜொன் உன்னிற்கு விளக்கமளித்துள்ளனர்.

வடகொரியாவின் அரசாங்க ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.

எனினும் அவர் இந்தத் திட்டத்துக்கு இன்னும் அனுமதிவழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, அமெரிக்காவின் அடுத்தக்கட்ட செயற்பாடுகளைப் பொறுத்தே இந்த திட்டத்தை அனுமதிப்பதா? இல்லையா? என்பதை அவர் தீர்மானிப்பார் என்று தெரியவருகிறது.

advertisement