பயணியின் உயிரைப்பறித்த உலகின் ஆபத்தான விமான நிலையம்

advertisement

விமானமொன்றின் தரையிறக்கத்தினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலாப்பயணி ஒருவரின் உயிரை விமானம் ஒன்று பறித்துள்ளது.

உலகின் ஆபத்து மிகுந்த விமானம் நிலையம் என்ற பெயரினைப் பெற்றது Princess Juliana International Airport in Siint Maarten இது.

இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை, அதனோடு ஓட்டியுள்ள கடற்கரையினை அண்டியுள்ளது.

இந்த ஓடுபாதையில் தரையிறங்கும் விமானத்துக்கும் கடற்கரையில் நிற்பவர்களுக்குமான இடைவெளி குறிப்பிட்ட மீற்றர்கள் மட்டும் உள்ளது.

மேலும் விமானங்களின் மோட்டார் வீச்சு கடற்கரை வரை வீச்சுக் கொண்டது. இது தொடர்பிலான எச்சரிக்கை விழிப்பு தட்டிகள் கடற்கரையெங்கும் உள்ளது.

இந்நிலையில் இவ்விமான ஓடுபாதையில் தரையிறங்கிக் கொண்டிருந்த விமானத்தினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த (57 வயது - Gayleen McEwan) பெண் ஒருவரின் உயிரை, விமான எஞ்சினின் வீச்சு பறித்துள்ளது.

வீச்சினை எதிர் கொள்ள முடியாத அவர், தூக்கி எறியப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஆபத்து மிகுந்த விமானம் நிலையம் என்ற பெயரினைப் பெற்ற இந்த விமான நிலையத்தில் இவ்வாறு ஒருவர் உயிர் இழந்திருப்பது இது முதற்தடவை ஆகும்..

advertisement